டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

Oct 15, 2019 04:35 PM 208

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் இருந்த படி காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, அரியலூர், கோவை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 2 மணி வரையும், மாலையில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் தலைமைச் செயலாளர் கேட்டறிந்து, ஆட்சியர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறார்.

Comment

Successfully posted