தேனியில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்த துணை முதல்வர்!

Dec 17, 2020 01:55 PM 384

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட 7 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 7 இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, அம்மாபட்டி, பொட்டிப்புரம், உப்புக்கோட்டை, கூழையனூர், அம்பாசமுத்திரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளை ரிப்பன் வெட்டி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Comment

Successfully posted