அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழா: மணமக்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

Feb 12, 2019 07:49 AM 274

சென்னையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் சீனிவாசனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும், கட்சியின் மூத்த நிர்வாகிகளான மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Comment

Successfully posted