துணை முதல்வர் பிறந்த நாளைக்கு கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்

Jan 14, 2020 03:34 PM 218

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் 69 வது பிறந்த நாளை ஒட்டி அதிமுக நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்....

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில்1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்   பிறந்தார்.அவருடைய 69 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள்,அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள முருகன் கோவிலில் அவருடைய பெயரில் அர்ச்சனை செய்து 69 தேங்காய்களை உடைத்து வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Comment

Successfully posted