துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி பயணம்

Jun 20, 2019 08:46 AM 701

அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நாளை அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின்போது, மற்ற முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் தேவைகள் குறித்தும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும், மத்திய அரசு உதவ வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted