துணை முதல்வர் பிறாந்த நாள் முன்னிட்டு நாகராஜ கோயிலில் சிறப்பு வழிபாடு

Jan 14, 2020 03:36 PM 270

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜ கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் குமரி மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், நாகராஜருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் உடல் ஆரோக்கியம் பெறவும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டியும் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comment

Successfully posted