இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து!

Aug 12, 2020 05:28 PM 2086

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் வேட்பாளராக களம் இறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் பதவிக்கு ஜோ பிடனும், அக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸூம் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸூக்கு, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரீஸ் போட்டியிடுவது இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted