முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து துணை முதலமைச்சர் வாழ்த்து

Sep 10, 2019 01:06 PM 415

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் பழனிசாமியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி இன்று தமிழகம் திரும்பினார். முதலமைச்சருக்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, வெளிநாட்டுப் பயணம் குறித்தும், முதலீடுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

Comment

Successfully posted