துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி பயணம்

Jun 19, 2019 03:21 PM 61

டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, வரும் 21ம் தேதி அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, தமிழகத்தின் சார்பாக, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை மாலை செல்கிறார். இந்த பயணத்தின்போது, மற்ற முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் தேவைகள் குறித்தும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கும், மத்திய அரசு உதவ வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted