ஆகாயத் தாமரை அகற்றும் பணியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!

Feb 18, 2021 03:40 PM 1248

தேனி மாவட்டத்தில் மந்தையம்மன் கோயில் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணியினை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

அல்லி நகரத்தில் 32 ஏக்கர் பரப்பளவில் உள்ள மந்தையம்மன் கோயில் கண்மாயில், தற்போது ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளன. இதனால், குடிநீர் பாதிக்கப்பட்டுவதால், உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, நவீன இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணிகளை தொடங்கி வைத்தார். இதில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

image

 

 

Comment

Successfully posted