வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆலோசனை

May 16, 2019 01:14 PM 70

வாக்கு எண்ணிக்கை குறித்து தமிழகம் உட்பட 5 மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனை கூட்டம் நிறைவடைந்ததையொட்டி இந்திய தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா டெல்லி புறப்பட்டு சென்றார்.

வரும் 19ஆம் தேதியுடன் 17வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி ஒரே நாளில் எண்ணப்பட உள்ள நிலையில், இது தொடர்பாக தமிழகம், கேரளா, குஜராத், யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் துணை ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா ஆகியோர் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்ததையொட்டி இந்திய தேர்தல் துணை ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

Comment

Successfully posted