பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

Mar 25, 2019 11:50 AM 106

கரூர் மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர் கடைத்தெருவில் பல கிலோ மீட்டர் வரை நடந்து சென்று, வணிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, தனக்கான வாக்குகளை சேகரித்தார். எந்த வித ஆரவாரமுமின்றி எளிமையாக சென்று வாக்குகளை சேகரித்த அவரது தன்மை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

Comment

Successfully posted