துணை வேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை - நீதிபதி கலையரசன்

Nov 28, 2020 01:44 PM 855

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விரைவில் நேரில் விசாரணை நடத்தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன், அடுத்தகட்டமாக சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது விசாரணை அலுவலகத்தில் 2 அதிகாரிகள் பணியில் உள்ளனர் என்றும், அவர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comment

Successfully posted