புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களின் தேர்தல் குறித்த விவரங்கள்!

Feb 27, 2021 08:19 AM 3266

புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதற்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி மார்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு மார்ச் 22 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதேபோல், அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27 ஆம் தேதியும், எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted