விரைவில் இணையும் தனுஷ்-அனிருத் கூட்டணி

Dec 15, 2019 06:24 PM 1624


தனுசுடன் மீண்டும் இணைவேன் என இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘3’படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம் அடுத்ததாக எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, விஐபி, மாரி,தங்கமகன் வரை தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அதன்பின் ஏனோ காரணங்களுக்காக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. ஆனால் இந்த கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என  ரசிகர்கள் உட்பட  தமிழ் சினிமாவே எதிர்பார்த்து வருகிறது.இந்நிலையில் ட்விட்டரில் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் #Askaniruth என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர், “  தனுஷ் அனி காம்போ வருமா வராதா தலைவா..?? ” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அனிருத் விரைவில் இணைவோம் என பதிலளித்துள்ளார். இதனால் தனுஷ்-அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted