சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தர்ம அடி

Sep 21, 2019 07:01 PM 125

திருப்பூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, நபரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கந்தசாமியை பிடித்து, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் இருந்து கந்தசாமி மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

Comment

Successfully posted