அலங்கார தோரணங்களுக்காக மின் இணைப்பை திருடிய தினகரன் அணியினர்

Apr 15, 2019 12:09 PM 38

திருவண்ணாமலையில் நடைபெற்ற தினகரனின் பொதுக்கூட்டத்தில் குழந்தைகளிடம் கொடிகளை கொடுத்து காக்க வைத்ததும், மின்விளக்கு அலங்கார தோரணங்களுக்காக சட்டவிரோதமாக மின்கம்பத்தில் மின்சாரம் திருடியதற்கும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தினகரன் ஆதரவுபெற்ற சுயேட்சை வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. வெகுநேரம் ஆகியும் தினகரன் வராததால், சிறுவர்களிடம் கட்சி கொடிகளை கொடுத்தும், பெண்களுக்கு பணம் கொடுத்து பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.

பொதுக்கூட்டத்திற்கு மின்விளக்கு மற்றும் அலங்கார தோரணங்களுக்காக சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்பை தினகரனின் ஆதரவாளர்கள் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே கலைந்து சென்றனர்.

Comment

Successfully posted