நேற்றிரவு ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி

Mar 02, 2020 07:11 AM 1336

ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக இந்திய அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்றிரவு சென்னை வந்தடைந்தார்.

13வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வருகிற 29-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்நிலையில் 13வது ஐபிஎல் போட்டியின் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக நட்சத்திர விடுதிக்கு தோனி புறப்பட்டுச் சென்றார். உலககோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக கிரிக்கெட் களத்தில் தோனியை காண முடியாமல் போனது. இந்நிலையில் தோனியின் சென்னை வருகை அவரது ரசிகர்களுக்கு இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் அவர் சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறது.

Comment

Successfully posted