உலகக்கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆனது குறித்து தோனி கருத்து

Jan 13, 2020 09:14 PM 692

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தான் ரன் அவுட் ஆனது குறித்து மகேந்திர சிங் தோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா போட்டியிலிருந்து வெளியேறியது. 10 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணி இருந்தபோது 50 ரன்களில் இருந்த தோனி ரன் அவுட் ஆனார். சில அங்குல இடைவெளியில் தோனி ரன் அவுட் ஆனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, தான் அப்போது ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று தனக்கு தானே கேட்டுக் கொள்வதாகவும் தான் பாய்ந்து விழுந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted