தோனியின் எடுத்த அட்வென்சர்ஸ் : வைரல் புகைப்படம்

Feb 16, 2020 05:06 PM 718


கன்ஹா தேசிய பூங்காவில் தோனி தான் எடுத்த புலியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை இணையவாசிகள் ஒரு புலியே, ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளது என கொண்டாடி வருகிறார்கள்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி, தோனி தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். ஓய்வு நேரத்தை தன் குடும்பத்தினருடன் செலவிட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

தோனி மீண்டும் இந்தியா அணி ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பாரா? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனி பங்கேற்க இருக்கிறார். இதற்கிடையே தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

image

இந்த நிலையில் தோனி, அவரது மனைவி சாக்ஷி மற்றும் நண்பர்கள்  கன்ஹா தேசிய பூங்காவுக்கு சென்றனர். அங்கு தோனி ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தோனி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் சோசியல் மீடியாவில் பகிர்ந்தும்,  ஒரு புலியே, ஒரு புலியை புகைப்படம் எடுத்துள்ளது என கொண்டாடியும் வருகின்றனர்.

Comment

Successfully posted