விஜயகாந்துடனான சந்திப்பின்போது தொகுதி பங்கீட்டு குறித்து பேசவில்லை

Mar 14, 2019 10:18 PM 286

தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை, விஜயகாந்தின் உடல் நலத்தை பற்றி விசாரித்ததாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை சாலிகிராம இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வருகை தந்ததாக கூறினார்.

முந்தைய தேர்தல் கூட்டணியின் போது கூட விஜயகாந்தை சந்திக்காத, டாக்டர் ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் இணைந்து மெகா கூட்டணியில் இணைந்துள்ள இந்த வேளையில் விஜயகாந்தை சந்தித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் போது, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Comment

Successfully posted