டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி

Sep 27, 2021 12:42 PM 23977

சென்னையில் டீசல் விலை, லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்தது.

டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் லாரி உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நேற்று, லிட்டருக்கு 93 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையான டீசல், இன்று 24 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 93 ரூபாய் 93 காசுகளாக விற்பனையாகிறது.

இன்றைய பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல், 98 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல் விலை தொடர்ந்து மாற்றமின்றி காணப்படுகிறது.

Comment

Successfully posted