அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறு பரப்பிய தினகரன் ஆதரவாளர் கைது

Oct 27, 2018 01:27 PM 370

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட, தினகரன் ஆதரவாளரான ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் ஆடியோ பதிவு ஒன்று சமூல வலைதளங்களில் பகிரப்பட்டது. ஆனால், இது தனது குரல் இல்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க இதுபோன்ற போலியான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சர் ஜெயக்குமார் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட குற்றச்சாட்டில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க கட்சியின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Comment

Successfully posted