வறுமையின் பிடியில் உள்ள சிறுவர்களை வற்புறுத்தி மதுவிற்பனை!! பின்னணியில் திமுக பிரமுகரா???

Jun 24, 2021 09:31 PM 1021

திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலியில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள சிறார்களை திமுக பிரமுகர் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
image
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் திமுக பிரமுகர் சிவா என்பவர் மதுபான விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அதேசமயம் குஜிலியம்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரிக்கால் என்ற பகுதியில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான லாரிகள் கரிக்காலிக்கு சென்று வந்தபடி உள்ளன. அந்த லாரி ஓட்டுநர்களை குறிவைத்து திமுக பிரமுகர் சிவா, மதுபான பாட்டில்களை கரிக்கால் கிராமத்தில் வறுமையின் பிடியில் உள்ள குடும்பத்தினரிடம் கொடுத்து விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த நமது செய்தியாளர் அங்கு கள ஆய்வு நடத்தியபோது சிறுவன் ஒருவன் மதுபாட்டில்களை வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
image
இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தையிடம் நமது செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, திமுக பிரமுகர் சிவா என்பவரின் பெயரை அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

image
பள்ளி செல்லவேண்டிய சிறார்கள், விடியல் ஆட்சியில், கூவி கூவி மது விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
image


Comment

Successfully posted