கொரோனா பாதிப்பின் காரணமாக சிகிச்சையில் இருந்த இயக்குனர் தாமிரா காலமானார்

Apr 27, 2021 12:45 PM 2816

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'ரெட்டச்சுழி' இயக்குநர் தாமிரா, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 53.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் இணை இயக்குநராக பயணியாற்றியவர் தாமிரா.

பின்னர், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான “ரெட்டச்சுழி“ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார்.

முதல் படத்திலேயே பிரபல இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா ஆகியோரை நடிக்க வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்பின்னர், சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் ஆண் தேவதை என்ற திரைப்படத்தை தாமிரா இயக்கினார்.

இந்த நிலையில், இயக்குநர் தாமிராவுக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comment

Successfully posted