அருள்நிதியின் அடுத்த படத்தின் டைரக்டர் youtube சேனலில் நடித்த பிரபலமா..!

Feb 25, 2020 11:33 AM 534நடிகர் அருள்நிதியின் அடுத்த  படத்தின் தோற்றம் மற்றும் அந்த படத்தின் புதிய டைரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய எதார்த்த நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை அடுத்து வெளியான ‘மௌனகுரு’ படம் சிறந்த வெற்றிபடமாக அருள்நிதி அமைந்தது. இதனை தொடர்ந்து வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’கே13’ ஆகியவை ரசிகர்களை கவர்ந்த படங்களாக அமைந்தது. இவர் தற்போது களாத்தில் சந்திப்போம் மற்றும் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'எருமை சாணி' விஜய் இயக்கும் படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார். இப்படம் மூலம் 'எருமை சாணி' விஜய் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்க உள்ளார்.
image

 

மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அருள்நிதி கல்லூரி மாணவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக அருள்நிதி 7 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Comment

Successfully posted