காஞ்சிபுரத்தில் 2 இடங்களில் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை திறப்பு: ஆட்சியர்

Oct 20, 2019 09:41 AM 117

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வளாகம் மற்றும் தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட, இரண்டு இடங்களில் பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளின் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் காலங்களில், பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted