மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பட்டியல் வெளியீடு

Mar 15, 2019 02:16 PM 106

சென்னையில் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளின் இறுதிப் பட்டியலை திமுக கூட்டணி வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணியின் இறுதி தொகுதி பட்டியலை வெளியிட்டார். அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

இதேபோல தருமபுரி, பொள்ளாச்சி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி திருச்சி கரூர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது.

மதிமுக ஈரோட்டிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை மற்றும் கோவையிலும் போட்டியிட உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூரிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும் போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் எஸ்.டி கொரியர் நிறுவனத்தின் தலைவர் நவாஸ் கனி போட்டியிட உள்ளார். இவர் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Comment

Successfully posted