ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா பொருட்கள் விநியோகம்!!

Jul 10, 2020 12:48 PM 906

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான விலையில்லா பொருட்கள் விநியோகம் தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து ஜூலை மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பொருட்கள் வாங்கும் வகையில், வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம், திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு விலையில்லா பொருட்கள் விநியோகப்பட்டு வருகின்றன.

Comment

Successfully posted