மகளிர் சந்தை வணிக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைத்தார்

Nov 03, 2019 08:26 PM 63

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வணிக ரீதியாக விற்பனை செய்ய, மாவட்ட நிர்வாகம் சார்பில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில், பாரம்பரியம் மிக்க பொருட்களை உற்பத்தி செய்து வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ஞாயிறு மகளிர் சந்தை என்னும் புதிய வணிக வளாகத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு புது முயற்சியாக இந்தச் சந்தை இருக்கும் எனத் தெரிவித்தார்.

Comment

Successfully posted