ஈரோட்டில் பகல் நேர குழந்தைகள் காப்பகம் !

Oct 13, 2018 07:24 AM 1007

ஈரோட்டில் காவல்துறையினரின் குழந்தைகளை பாதுகாக்க பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் துவக்கி வைத்தார்.

காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் குழந்தையை பணி சுமையின் காரணமாக பகல் நேரங்களில் பாதுக்க முடியாமல் காவலர்கள் அவதிபட்டு வந்தனர்.

இந்நிலையில் காவலர்களின் சுமையை போக்கும் வகையில், ஈரோடு அடுத்துள்ள ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதபடை பிரிவு வளாகத்தில் காவலர்கள் குழந்தையை பாதுகாக்க பகல் நேர காப்பகத்தை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சத்திகணேஷ் துவங்கிவைத்தார்.

Comment

Successfully posted