மாவட்ட அளவிலான சிலம்பம், வாள் சண்டை விளையாட்டு போட்டிகள்

Mar 11, 2019 06:34 AM 417

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம், வாள் சண்டை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ராஜராஜசோழன் சிலம்பக்கலை கூட்டமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தனியார் பள்ளியில் நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், வாள் சண்டை, கத்தி சண்டை உள்ளிட்ட விளையாட்டுகள் அழியாமல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இப்போட்டியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், சேலம், கரூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் .

Comment

Successfully posted