தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்

Dec 13, 2019 05:31 PM 288

திருக்கோவிலூரைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் தீபாவளிச் சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டோர், காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் ஆதரவாளரும் திமுக பொறுப்பாளருமான முரளிகிருஷ்ணன் என்பவர் தீபாவளிச் சீட்டு நடத்திப் பொதுமக்களிடம் 25 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். அவரிடம் பணத்தைக் கட்டி ஏமாந்த 60க்கு மேற்பட்டோர் சென்னையில் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதியை நேரில் சந்தித்து தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் மனு அளித்தனர். இது குறித்து ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்துக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் திருக்கோவிலூர் திமுக பொறுப்பாளர் முரளி கிருஷ்ணனைத் தேடி
வருகின்றனர்.

Comment

Successfully posted