அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்!

Sep 04, 2020 08:11 AM 2114

அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு, உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

கிராண்ஸ்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், இங்கிலாந்தின் கைல் எட்மன்டை எதிர்கொண்டர். முதல் சுற்றை இழந்த ஜோகோவிச், அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இறுதியில், 6 க்கு 7, 6 க்கு 3, 6 க்கு 4, 6 க்கு 2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் கீரிஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் மேக்சிம் கிரேசியை 7 க்கு 6, 6 க்கு 3, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனையான கமிலா ஜியோர்ஜியை 6 க்கு 1, 6 க்கு 2 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Comment

Successfully posted