கொரோனா பாதித்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்!

Mar 29, 2021 09:20 PM 536

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக வேட்பாளர் முகக்கவசம் கூட அணியாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக அரவிந்த் ரமேஷ் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்து வீடு திரும்பி தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைவருடனும் கலந்து, முகக்கவசம் கூட அணியாமல் அரவிந்த் ரமேஷ் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டிய வேட்பாளரே கொரோனா தொற்றை பரப்பும் நோக்கில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted