திமுக தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை : துணை முதலமைச்சர் விமர்சனம்

Mar 29, 2021 01:07 PM 389

போடிநாயக்கனூர் பகுதியின் அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

துரைசாமிபுரம் பகுதிக்கு பிரசாரம் செய்த அவர், அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை எனவும், பொய்களை கூறி ஆட்சியமைக்க ஸ்டாலின் திட்டமிடுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

அதனை தொடர்ந்து, குச்சனூர் பகுதிக்கு சென்ற அவருக்கு அந்த பகுதி மக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

பூலானந்தபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், 2023-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் சொந்த வீடு இல்லாத மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து மார்க்கையன் கோட்டை பகுதிக்கு சென்ற அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.


Comment

Successfully posted