எஜமானர் இறந்த இடத்தில் 80 நாட்களாக காத்திருந்த நாய் - சீனாவில் நெகிழ்ச்சி

Nov 18, 2018 07:07 PM 458

சீனா மங்கோலியா மாகாணத்தில் கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி விபத்து ஒன்று நடந்துள்ளது. இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடன் வந்த செல்ல பிராணி நாய் ஒன்று விபத்து நடந்த சாலையோரம், கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கேயே அமர்ந்தவாறு இருக்கிறது.இறந்துபோன தனது எஜமான் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அந்த நாய் காத்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த விலங்கு பாதுகாப்புத் துறையை சேர்ந்த அதிகாரிகள் நாயின் எஜமானரின் உறவினர்களை தேடி வருகின்றனர்.

சாலையோரம் தன் எஜமானருக்காக நாய் காத்திருக்கும் இந்த வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Comment

Successfully posted