படியில் பயணம் செய்யாதே : அட்வைஸ் பண்ணும் சின்னபொண்ணு நாய்..

Nov 18, 2019 01:43 PM 1062

சென்னை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு நண்பராக மாறிய சின்னபொண்ணு நாயின் செயல்கள் ஆச்சரியபட வைக்கிறது 

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் மக்கள் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு அவர் அவர்களின் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருகின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பை மறந்துவிடுகின்றனர்.மனிதர்களாகிய நாம் மறந்தாலும், 5 அறிவை உடைய நாய் பாதுகாப்பாக நம்மை வழிநடத்தும் செயல் ஆச்சர்ய பட வைக்கிறது.

தமிழ்நாட்டின் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அருகில் ஒரு பழைய விசிறியின் கீழ் தூங்கிக் கொண்டிருக்கும் நாயின் பெயர் சின்னபொண்ணு . 2 வருடங்களுக்கு யாருமின்றி ரயில் நிலையத்திற்கு வந்த சின்னபொண்ணு தற்போது அந்த பகுதியில் இருப்பவர்களின் நண்பராகி உள்ளது.

இதன் அன்றாட வேலையே பயணிகளை பாதுகாப்பாக வழிநடத்துவது தான்.இந்த சின்னபொண்ணு நாய் படியில் பயணம் செய்யும் பயணிகள் , தடையை மீறி தண்டவாளத்தை கடக்க முயலும் பயணிகளை பார்த்து குறைத்து , அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

இது ஒரு பயிற்சி பெறாத நாய் என்றாலும், ரயில் நிலையத்தில் பணிபுரியும் railway protection force அதிகாரிகளுடன் இணைந்து தினமும் பயணிகளை வழிநடத்தி வருகிறது.தற்போது சின்னபொண்ணின் விழிப்புணர்வு ஏற்படுத்து இந்த செயல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Comment

Successfully posted