சிஏஏ சட்டத்தை மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் : பியூஷ் கோயல்

Feb 19, 2020 07:12 AM 375


குடியுரிமை திருத்தச் சட்ட  விவகாரத்தை மலிவான அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.


தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் ரயில்வே திட்டம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டாட்சி அமைப்பில், தேசியச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சிஏஏ சட்டத்தை மலிவான அரசியல் அல்லது ஒரு சாராரை மட்டும் திருப்திப்படுத்துவதன் அடிப்படையில் அரசியலாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார். சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முடிவை, தெலங்கானா அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் பியூஸ் கோயல் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted