டொனால்ட் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிப்பு

Feb 06, 2019 09:58 PM 66

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான 2வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை விவகாரத்தில், அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த சூழலில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி, சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், வடகொரியா, முழுமையாக அணு ஆயுத சோதனையை கைவிட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில், வியட்நாமில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 தேதிகளில் இருநாட்டு அதிபர்கள் சந்திக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அணு ஆயுத சோதனையை வடகொரியா கைவிடாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Comment

Successfully posted