கல்வி வீடியோவை மாணவர்களுக்கு மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஆணை

Aug 01, 2020 11:23 AM 728

12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள வீடியோக்களை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தருமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முழு ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க இணையதளம் வழியாக பாடம் சார்ந்த 136 காணொலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மடிக்கணிகள் மூலம் பாடங்களை ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்கள் கற்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி கழகமும், கல்வி தொலைக்காட்சியும் இணைந்து தயாரித்துள்ள 297 காணொளிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்கள் ((tiny.cc/veetuppalli என்ற)) இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அந்த வீடியோக்களை அவர்களது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted