சீனாவில் வண்ண மயமாக நடந்த ட்ராகன் படகுப்போட்டி

Jun 11, 2019 03:01 PM 66

சீனாவில் நடைபெற்ற ட்ராகன் படகுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் நடைபெறுவது போன்று, சீனாவின் ஹாங்காக்கில் உலகளவிலான ட்ராகன் படகுப் போட்டி நடைபெறுகிறது. பாரம்பரிய முறைப்படி, ஹாங்காங்கில் 3 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு நடத்தப்பட்ட படகுப் போட்டியில் உலகளவில் இருந்து எண்ணற்ற வீரர்கள் கலந்துகொண்டு, ஆர்வமுடன் துடுப்பு போட்டனர். இதில் முதலில் எல்லையை அடைந்த படகு குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வை நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Related items

Comment

Successfully posted