பல தடைகளை தாண்டி திரௌபதி திரைப்படம் வெளியீடு

Feb 19, 2020 09:45 AM 2072

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி. இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படமானது சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் கானவுள்ளது  திரௌபதி.

இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில், திரௌபதி திரைப்படத்திற்கு  U\A சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இப்படம் பிப்ரவரி 28  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

image

Comment

Successfully posted

Super User

வாழ்த்துகள்சேவைசிறப்புற