ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பு

Jul 11, 2019 07:10 AM 111

ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றதையடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 17 பொறியாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகல் வாரிய அதிகாரிகள், சென்னை மெட்ரோ அதிகாரிகள் என 250க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக பணியாற்றி வந்தனர். இதற்கான மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரும் இறூதிக்கட்ட சோதனை புதன் இரவு நிறைவுப்பெற்றது.

இதையடுத்து ரயில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சமாக 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted