வெள்ளி முதல் வேலூரிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Jul 11, 2019 10:03 PM 36

வேலூரில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டரவாக்கம் பெரியகுளம், தாமரை குளம் உள்ளிட்ட குளங்களை குடிமராத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

Comment

Successfully posted