தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உணவக பணிப்பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் டிப்ஸ் - அதிர்ச்சியில் பணிப்பெண்

Nov 03, 2018 12:04 AM 382

யுடியூப் பிரபலம் ஒருவர் கரோலினாவில் உள்ள Sup Dog என்ற உணவகத்திற்கு சென்று, தண்ணீர் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். தண்ணீரை குடித்துவிட்டு வெளியே சென்றபோது அவருக்கு பரிமாறிய உணவக பணிப்பெண்ணுக்கு சுமார் 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை டிப்ஸாக கொடுத்துள்ளார்.மேலும், தண்ணீருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அப்பெண் பெரும் ஆச்சரியம் அடைந்து தன் உயர் அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த அவரை பணத்துடன் புகைப்படம் எடுத்து Sup Dog உணவகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Sup Dog-ல் பணிபுரியும் பலர் வறுமை காரணமாக கல்லூரிக்கு செல்ல முடியாமல் இருப்பவர்கள் எனவும் அவர் கொடுத்த டிப்ஸ் பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அப்பணிப்பெண் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted