பணிநேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

Apr 19, 2019 09:14 AM 100

நாகை அருகே நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயிலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தனது பணிநேரம் முடிந்ததால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்று கூறி சரக்கு ரயிலை ஓட்டிவந்த ஓட்டுநர் முத்துராஜா, நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையத்தை தாண்டி 100 மீட்டர்வரை ரயில் நின்றதால், ரயில்வே கேட் வழியாக சாலையை கடக்க முடியாமல், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் சிக்னல் இன்றி பின்னால் வந்த ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதிகாரிகள், பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து ரயிலை இயக்க முத்துராஜா ஒப்புக்கொண்டார்.

 

Comment

Successfully posted