கிணற்றில் மூழ்கி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

Mar 14, 2019 06:51 AM 249

ஈரோட்டில் கிணற்றில் மூழ்கி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெரியசேமூர் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்த தறிபட்டறை தொழிலாளி கார்த்திகேயன் என்பவரது மகன் கவுதம். 6 ம் வகுப்பு படித்து வந்த கவுதம் வீட்டின் பின்புறமுள்ள 40 அடி கிணற்றில் தனது நண்பருடன் குளிக்க சென்றுள்ளான். நீச்சல் தெரியாததால் இருவரும் கிணற்றின் ஓரத்தில் நின்று குளித்தபோது எதிர்பாராத விதமாக கவுதம் கிணற்றுக்குள் விழுந்தான். ஆழமான பகுதியில் விழுந்த கவுதம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.  இதனையடுத்து ஆழமான பகுதியில்  சிக்கியதால் மீனவர்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் போராடி உடலை வெளியே எடுத்தனர். இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted