வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

Nov 17, 2019 07:03 AM 117

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted