மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை - பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Oct 12, 2018 12:14 PM 600

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். வறட்சியின் காரணமாக பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு முற்றிலும் குறைந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை காரணமாக பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளவான 47 அடியை விரைவில் எட்டும் என்று கூறப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted